நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கொவிட் தடுப்பூசியைப் ஏற்றிக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் சமித கினிகே தெரிவித்தார்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
இதனிடையே, கொவிட் தொற்றினால் மேலும் 6 பேர் நேற்று(22) உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று(22) அடையாளங்காணப்பட்டுள்ளனர்.










