நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் மூன்றாண்டு பூர்த்தி விழா

நுவரெலியா மாவட்ட கலைஞர்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியம் தனது மூன்றாவது வருட பூர்த்தி விழாவை 27ஆம் திகதி, சனிக்கிழமை ஹற்றன்- டிக்கோயா நகர மண்டபத்தில் நடத்தவுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பானது, பல சவால்களுக்கு முகம் கொடுத்து மூன்று வருடத்தை பூர்த்தி செய்கின்றது என ஒன்றியத்தின் செயலாளர் இராமன் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் டிக்கோயா நகர சபை மண்டபத்தில், ஒன்றியத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழாவை ஸ்தாபக தலைவர் பிரபல பாடகர் ராஜ்போரா தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் கௌரவிப்பும் நடைபெறவுள்ளதாக ஒன்றியத்தின் செயலாளர் இராமன் கேதீஸ்வரன் தெரித்தார்.

அத்துடன் அன்றைய தினம் புதிய கலைஞர்கள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ளும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர் சகல கலைஞர்களையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles