இலங்கையர்கள் தற்போது தமது வருமானத்தில் 30 சதவீதத்தை உணவுக்காக செலவிட வேண்டியேற்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் இலங்கையில் உணவு வகை பணவீக்கம் 90% ஆக இருந்தது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

உலகில் அதிக பணவீக்க பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது
பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. முன்னர் 20 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய தற்போது 50 ஆயிரம் ரூபாவரை தேவைப்படுகின்றது.
அதேவேளை, அமெரிக்கர்கள் தமது வருமானத்தில் தமது உணவுக்காக 7% செலவிடுகின்றனர். ஜூலை மாதம் அமெரிக்காவில் உணவு வகை பணவீக்கம் பத்து சதவீதமாக இருந்தது.
நைஜீரியர்கள் தங்கள் வருமானத்தில் 59 சதவீதத்தை உணவுக்காக செலவிடுகின்றனர். ஜோர்தானியர்கள் தமது வருமானத்தில் 26 சதவீதத்தை உணவுக்காக செலவிடுகின்றனர்.










