பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் தற்போது கோதுமைக்கான  மாபியா குழுவொன்று இயங்கிவருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.

கோதுமை மாபியா உருவாகியுள்ளமையினால் நாட்டில் கோதுமையினால் உற்பத்தி செய்யப்படும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேக்கரி உரிமையாளர்கள் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் தற்றும் தங்களது வர்த்தகங்களை இடைநிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles