நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR

நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR)  குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார்.

இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமுர்த்தி, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் உதவி, போன்ற நலன்புரி திட்டங்களின் கீழ் தற்போது நன்மைகளைப் பெறும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பவுள்ளது.

மேலும், மானியத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர்களையும் இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 3.9 மில்லியன் குடும்பங்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த சபையின் தலைவர், இந்த வேலைத்திட்டம் 06 ஆரம்ப கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles