வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ரஷ்யா!

வட கொரியாவிடம் இருந்து பீரங்கி உள்ளிட்ட பல ஆயுதங்களை ரஷ்யா வாங்குகிறது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யாவின் திறன் குறைந்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நியூயோர்க் ரைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகளை உள்ளடக்கிய ஆயுதங்களை வட கொரியாவிடம் இருந்து ரஷ்யா வாங்கியுள்ளதாகவும் இது போன்ற மேலும் பல இராணுவத் தளபாடங்களை வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் அவற்றின் செயல்திறனை நிரூபிப்பதில் தோல்வி அடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான மொஹஜர்-6 (Mohajer-6) மற்றும் ஷாஹெட்-சீரிஸ் ஆளில்லா விமானங்களை (Shahed-series unmanned aerial vehicles) வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளை மீட்கும் தாக்குதல்களை உக்ரைன் சமீபத்தில் பல இடங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும், கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆயுத-தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மேற்கத்திய நாடுகளின் ரஷ்யா மீதான தடைகளும் அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles