சர்வஜன வாக்கெடுப்புகோரி ’20’ இற்கு எதிராக முதல் மனு தாக்கல்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்ம் சர்வஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறுகோரி உயர் நீதிமன்றில் அடிப்படை இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இந்திக கால்லகேவினால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் பல ஏற்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை இழத்தல்,

தேர்தல் ஆணைக்குழுவினால் வௌியிடப்படும் உத்தரவுகளை மீறும் சந்தர்ப்பத்தில் வழக்கு தொடர்வதற்காக குறித்த ஆணைக்குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தை குறைத்தல் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் போன்று பொது நிறுவனங்களின் தணிக்கையாளர்களை அகற்றுதல்,

இரட்டை குடியுரிமை கொண்ட நபர்களுக்கு பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காணப்பட்ட தடங்கல்களை நீக்குதல் போன்று பொதுமக்களுக்கு எதிரான பல ஏற்பாடுகள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் அடங்கியுள்ளதாக மனுதார் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேபோல், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்துச் செய்யப்பட்ட அவசர சட்டமூலங்களை கொண்டு வருவதற்காக காணப்பட்ட வாய்ப்பு முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சவாலுக்குட்படுத்தி வழக்கு தொடுப்பதற்கு எழு நாட்கள் அவகாசம் உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles