ஹட்டன் நகரில் பாரிய அளவில் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பஸ் தரிப்பிடங்களிலும், வர்த்தக நிலையங்களுக்கு அருகாமையிலும், இலங்கை மீன் பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தின் அருகிலும் என பல இடங்களில் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
அதிகளவில் ஈ, நுளம்புகள் பெருகியுள்ளன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிரச்சினை இருந்தாலும் அது தொடர்பில் அட்டன் – டிக்கோயா நகரசபை கண்டுகொள்வதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செ.தி. பெருமாள்










