IMF உடன் இரகசிய ஒப்பந்தம்?

சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை. கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.”

இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை. அமைச்சரவை, கோப்குழு, கோபா குழு உட்பட நிதி தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் நபர்ககளுக்கு உடன்படிக்கைகள், உரிய நேரத்தில் வழங்கப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles