200 வருடங்கள் லயன் வாழ்வு – அப்பட்டமான மனித உரிமை மீறல்!

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடங்களாக லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதி பத்திரத்தை வழங்கவும். அதேபோல வீடுகளை அமைக்க கடன் உதவியை வழங்கவும். முடியுமானவர்கள் அதனை பெற்று நிர்மாணிப்பார்கள். “

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், லயன் யுகத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும், பெண்களோ, பிள்ளைகளோ வாழ்வதற்கு பொருத்தமான சூழல் லயன் அல்ல.” – எனவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

” இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.” என கூறினார்.

 

Related Articles

Latest Articles