உடப்புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் Bio Gas தயாரிப்பு

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் மனித கழிவு ஊடாக இயற்கை எரிவாயு (பயோ கேஸ்) பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான முதற் கட்ட அபிவிருத்தி பணிகள் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டது.

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டி.வசந்த திஸாநாயக்க தலைமையில் இவ் அபிவிருந்தி பணி ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது,..

தான் லூனுவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது அங்கு மாட்டு சாணத்தால் இயற்கை எரிவாயு பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை மேற்கொண்டேன் அது சாத்தியமானது.

இதனூடாக லூனுவத்தை பொலிஸ் நிலையத்தில் சமையல் அறைக்கு தேவையான இயற்கை எரிவாயு பெற்றுக்கொண்டதுடன் மேலும் இதனூடாக நான்கு வீடுகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கப்பட்டது.

தற்போது நான் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்திற்கு இடம்மாறி நிலைய பொறுப்பதிகாரியாக வந்துள்ளேன். இந்த பொலிஸ் நிலையத்தில் நான்கு கழிவறைகள் உள்ளது. இவை நிரம்பி வெளியேறும் போது மனித உதவியுடன் பணம் செலுத்தி அகற்ற வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த மனித கழிவு ஊடாக இயற்கை எரிவாயு பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான தொழிநுட்டப ஆலேசனைகளையும் பெற்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் பூர்த்தியாக சுமார் ஏழு இலட்சம் இன்றைய காலக்கட்டத்தில் தேவைப்படும்.

இதற்காக அரசாங்கத்தின் நிதி உதவிகள் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை.

மாறாக எமது பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமையின் பின் எஞ்சியுள்ள நேரங்களில் சிரமதான பணிகளை மேற்கொண்டு இந்த அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.

அத்துடன் இதற்கு தேவையான சீமெந்து,கம்பி,உள்ளிட்ட பொருட்களை உடப்புஸ்ஸலாவை நகர வர்த்தகர்கள்,நலன் விரும்பிகளிடம் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அரச செலவினத்தை குறைத்து பொலிஸ் நிலைய சமையல் அறைக்கு தேவையான இயற்கை எரிவாயுவை பெற்றுக்கொள்வும் முடியும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles