நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உணவில் சாக்கு பை நூல்

நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது.

ஊடகவியலாளர் ஒருவர் உணவை உண்ணும் போது அவருக்கு இந்த சாக்கு பை நூல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவர் நாடாளுமன்ற உணவகத்தின் பிரதான அதிகாரியிடம் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்துள்ளதுடன் உணவில் கிடந்த நூலை அவரிடம் வழங்கியுள்ளார்.

நெத்திலி பொறியலில் சாக்கு பை நூல் கிடந்ததை அடுத்து சில ஊடகவியலாளர்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்துக்கொண்டுள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உணவகத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு வகையான மதிய உணவில் வெங்காய சுவை இருந்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உணவகத்தில் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உணவுகளில் புழுக்கள், பிளாஸ்டிக் துண்டுகள், நைலோன் நூல் துண்டுகள் அவ்வப்போது கிடைத்துள்ளன.

அதேவேளை நாடாளுமன்ற உணவகத்தில் நேற்று வழங்கப்பட்ட மீன் கறி விஷமானதில் கடுமையான சுகவீனத்திற்கு உள்ளான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நாராஹென்பிடி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மருத்துவப் பிரிவில் ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles