இராணுவ சிப்பாயின் கழுத்தில் கத்தியை வைத்து ஆட்டோ கடத்தல்!

பெண்ணொருவர்  தலைமையிலான கொள்ளை கோஷ்டியொன்று,  இராணுவ சிப்பாயின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அவருக்கு சொந்தமான ஆட்டோவை  கடத்திச் சென்ற சம்பவமொன்று  ராஜகிரிய நெலும் மாவத்தை பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

இராணுவ சிப்பாய் நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் கடமையாற்றி வருகிறார்.இவர் கடமைக்காக  அவிசாவலையிலுள்ள தனது வீட்டிலிருந்து தமக்கு சொந்தமான ஆட்டோவில் அதிகாலை  வந்துகொண்டிருந்தபோது,  கொஸ்வத்த சந்தியில் வைத்து நபரொருவர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

தனது தாய் சுகயீனமுற்றிருப்பதாக தெரிவித்து தன்னை ராஜகிரியவிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். தாய் என்பதால் இராணுவ சிப்பாய் மனமிறங்கி அந்த நபரை ராஜகிரிய நெலும் மாவத்தைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த இடத்தில் ஆட்டோவுக்கு  அருகே வந்த பெண்ணொருவரும் மேலும் இரு நபர்களும் சிப்பாயின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி ஆட்டோவை கடத்திச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles