காதலியை காட்சிப்படுத்திய காதலனுக்கு சிறை!

‘பேஸ்புக்’ ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்திய யுவதி, திடீரென காதலை முறித்துக்கொண்டதால், ஆத்திரமுற்ற காதலன், குறித்த யுவதியின் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட அவருக்கு ஆறு மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறும், அதனை வழங்க தவறினால் மேலும் ஆறு மாத கால சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

Related Articles

Latest Articles