சிறையிலிருந்து பாணந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிக்காக , ஐஸ் போதைப்பொருளை மார்புக்கச்சையில் மறைத்து எடுத்து வந்த பெண்னொருவரை, பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொறட்டுவ, மொறட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்னொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணின் தந்தை சிறையிலிருப்பதாகவும் இன்று அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவர இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு அதிகாரியொருவர் இப்பெண்ணை சோதனை செய்தபோது மார்புக்கச்சையில் மறைத்து வைத்திருந்த தீப்பெட்டிக்குள் பொலிதின் கவரொன்றில் ஐஸ் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபரான பெண்ணை பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
