வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகளை கடத்தும் நோக்குடன் வரம்புக்கு மீறி நகைகளை அணிந்து வருபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்பட்டு வருவதால் மாதம்சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை நாடு இழப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பல தங்க கடத்தல்காரர்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உடனடி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இவ்வாறு நாட்டுக்குள் தங்கம் கடத்தப்பட்டு வருவதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் சாதாரண பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதென்றும் தெரிவித்துள்ளார்.
