பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ள திலினி -வெளிவரும் உண்மைகள்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், 20 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை திலினி பிரியமாலியிடம் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய பண மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள போதை பொருள் கடத்தல்காரர், திலினி பிரியமாலிக்கு தனது முகவருடன் இந்த பணத்தை ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது.

கொழும்பில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட திலினி பிரியமாலி பாரிய மோசடியில் ஈடுபட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்ட சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். பலர் முறைப்பாடு செய்ய முடியாது தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிடைத்த முறைப்பாடுகள் குறித்தும் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, சுமார் 1000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

Related Articles

Latest Articles