ஒக்டோபர் மாதத்துக்கான 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18) ஆரம்பமாகின்றது.
இதன்போது 2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (பாதீடு) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது முதலாம் வாசிப்பாக கருதப்படும்.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை கடந்தவாரம் அனுமதி வழங்கியிருந்தது.
வரவு – செலவுத் திட்ட விவாதம் நவம்பர் மாதம் ஆரம்பமாக, டிசம்பர்வரை நடைபெறும்.










