வென்றது இலங்கை – போராடி தோற்றது நெதர்லாந்து!

ரி-20 உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான
போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சுப்பர் – 12 சுற்றுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய
இலங்கை அணி, நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக குசல் மெண்டில் 79 ஓட்டங்களளப் பெற்றார். அசலங்க 31 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

Related Articles

Latest Articles