யாழில் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை காட்டிக்கொடுத்தால் சன்மானம்!

யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொதுஇடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களுக்கு அக்குற்றத்துக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையை சன்மானமாக வழங்குவதென யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. மேலும் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன் உள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும். வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசி விட்டுச் செல்கின்றனர்.

அதற்கு அவ்வீதியிலுள்ள மக்களே பொறுப்பு கூற வேண்டும். அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்து குற்றப்பணம் அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி. மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறு குற்றமிழைப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் குற்றப்பணத்தில் 10 வீதம் ஆதாரம் தருபவர்களுக்கு சன்மானமாக வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles