ஆஸி.- நியூசிலாந்து இன்று மோதல்! வழிவிடுவாரா வருணபகவான்?

20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று ஆரம்பமாகின்றது. ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டத்திற்கு வருணபகவான் வழிவிடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சூப்பர்12 சுற்று ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன.

சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. ஆனால் சிட்னியில் தற்போது விளையாட்டுக்கு உகந்த சீதோஷ்ண நிலை இல்லை. சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அது, நேற்று வீரர்களின் பயிற்சிலும்சற்று பாதிப்பை ஏற்படுத்தியது. போட்டிக்குரிய இன்றைய தினமும் சிட்னியில் கன மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆட்டம் ரத்தாகலாம் அல்லது குறைந்த ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படலாம்.

Related Articles

Latest Articles