அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே வாக்களித்திருந்தார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவே, 22 இற்கு எதிராகவும் தனது வாக்கை நாடாளுமன்றத்தில் நேற்று பயன்படுத்தினார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்வரை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக்கூடாது என தமது உரையின்போது சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
