‘மலையக பாடசாலைக்கு பஸ் கையளித்தார் சஜித்’

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கேம்பிரிட்ஜ் கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசைகளை தொடர்ந்து பாடசாலை வாயில் வரை பேரூந்தை ஒட்டி வந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அங்கு மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபரிடம் கையளித்தார். மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் தமக்கான பேரூந்தினை வரவேற்றனர்.

பின்னர் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடன மற்றும் கலை நிகழ்வுகளோடு நிகழ்வுள் சிறப்பாக நடைபெற்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 38 வது பஸ் இது என்பது விசேடம்சமாகும்.

Related Articles

Latest Articles