மண்மேடு சரிந்து விழுந்து முதியவர் பலி – பண்டாரவளையில் சோகம்

பண்டாரவளை-ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு (31) இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த வீட்டின் உரிமையாளரும் உறவுக்கார பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 73 வயதான வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles