ஆலயத்தில் சறுக்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தினமும் ஆலய வழிபாட்டுக்காக செல்லும் இவர், வழமை போல கால் கழுவச் சென்றபோது சறுக்கி வீழ்ந்து தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles