– பின்புலத்தில் உள்ளவர்களின் சதித்திட்டம் அம்பலமாகலாம் –
ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்து போலி பிரசாரங்களை முன்னெடுத்து ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இன்று பதியப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பிலான விசாரணைகளும் சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த போலி பிரசாரத்தின் புன்புலத்தில் இருந்த அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்பப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் இந்திய வீடமைப்புத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் கலந்துரையாடல்கள் நடத்தி வீடமைப்புத் திட்டங்களை கொண்டுவரும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்திருந்தார்.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டி வழங்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக சில அரசியல்வாதிகளின் கைக்கூலிகளால் கோரப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டி முடிப்பதற்கு ஒருவருடம் ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால், மார்ச் மாதம் கடிதம் வழங்கிய பின்னர் பெயர்ப் பட்டியல் வழங்கிய மறுநாளே விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதுவரை வீடுகள் கட்ட ஆரம்பிக்கவில்லை என்ற தகவல் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அதனை மொழி மாற்றி இனி வரும் காலங்களில் வீடுகள் கட்டப்போவதில்லை என விஷமிகளால் கேவலமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் அரசியல் கைக்கூலிகளால் அரசியல் இலாபம் கருதி தமிழில் தவறாக தயாரிக்கப்பட்டு பிரசாரப்படுத்தப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் தவிர்ந்தோருக்கும் வீடமைப்பு வழங்கலாம் என இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ள நிலையில் அரசியலுக்காக இவ்விடயம் தவறாக கையாளப்படுகிறது.
மொழி பெயர்ப்பு மாற்றத்தின் ஊடாக பதுளை மாவட்ட ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் கேவலமான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களை வழிடத்திய அரசியல்வாதிகளை நிராகரிப்பதற்கு ஆசிரியர் சமூகம் தயாராகிவிட்டது.
செந்தில் தொண்டமான், கடந்த 10 வருட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் எதனையும் முழுமைப்படுத்தாமல் விட்டதில்லை என ஆசிரியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்புலத்திலேயே போலியான பிரசாரங்களை மேற்கொண்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே வெளியான செய்தி :
போலி பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கை! வீடுகள் வந்து சேரும் -செந்தில் தொண்டமான்