மலையகத்தில் வீட்டுத்திட்டமானது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமன்றி ஏனையோருக்கும் முன்னெடுக்கப்பட்ட முயற்சி செந்தில் தொண்டமானால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே கடந்த காலங்களில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்ற சூழ்நிலையில் அது சுமார் 30 வீதமானோரை மாத்திரமே மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. ஏனென்றால் 30 வீதமானோர் மாத்திரமே தோட்டங்களில் தொழிலாளர்களாக கடமை புரிகின்றனர்.
மிகுதியாக இருக்கின்ற 70 வீதமானோரையும் வீடமைப்புத் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் அவர்கள் இந்திய வீடமைப்புத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களிடம் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்துடன் அது தொடர்பில் விளக்கமளித்ததுடன் பல ஆவணங்களையும் கடந்த காலங்களில் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கு ஒரு சாதகமான பதில் இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றதன் பின்னர் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற, முறையான வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகள் அமைப்பதற்கான திட்டம் முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தில் மலையக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று, ஆசிரியர் சமூகத்தின் பலநாள் கனவான வீடமைப்புத் திட்டத்தை, செந்தில் தொண்டமான் அவர்கள் முதல் வேலைத்திட்டமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த வேலைத்திட்டத்துக்கு கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னர் அமைச்சின் செயலாளர் ஊடாக உத்தியோகபூர்வமாக செந்தில் தொண்டமான் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஆசிரியர்களை உள்ளடக்குவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது என அமைச்சின் செயலாளர் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊவா மாகாணத்தில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விண்ணப்பித்த ஆசிரியர்களையும் உள்ளீர்ப்பதற்கான அனுமதிக் கடிதம் கடிதம் வழங்கப்பட்டது.
இதுவரை எவராலும் நிறைவேற்றப்படாத கோரிக்கையை செந்தில் தொண்டான் நிறைவேற்றியுள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டி வழங்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக சில அரசியல்வாதிகளின் கைக்கூலிகளால் கோரப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டி முடிப்பதற்கு ஒருவருடம் ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால், மார்ச் மாதம் கடிதம் வழங்கிய பின்னர் பெயர்ப் பட்டியல் வழங்கிய மறுநாளே விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதுவரை வீடுகள் கட்ட ஆரம்பிக்கவில்லை என்ற தகவல் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அதனை மொழி மாற்றி இனி வரும் காலங்களில் வீடுகள் கட்டப்போவதில்லை விஷமிகளால் கேவலமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் அரசியல் கைக்கூலிகளால் அரசியல் இலாபம் கருதி தமிழில் தவறாக தயாரிக்கப்பட்டு பிரசாரப்படுத்தப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் தவிர்ந்தோருக்கும் வீடமைப்பு வழங்கலாம் என இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ள நிலையில் அரசியலுக்காக இவ்விடயம் தவறாக கையாளப்படுகிறது.
மொழி பெயர்ப்பு மாற்றத்தின் ஊடாக பதுளை மாவட்ட ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் கேவலமான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களை வழிடத்திய அரசியல்வாதிகளை நிராகரிப்பதற்கு ஆசிரியர் சமூகம் தயாராகிவிட்டது.
செந்தில் தொண்டமான், கடந்த 10 வருட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் எதனையும் முழுமைப்படுத்தாமல் விட்டதில்லை என ஆசிரியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் ஆசிரிய குழாமினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் தேர்தலை மையப்படுத்தி போலியான தகவல்களை பறிமாருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்க தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.