சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு உறவினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறோம். சிறைச்சாலையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்ட மாஅதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி, விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நீதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இச்சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மற்றும் கருணாகரன், அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
