விமானப்படைச் சிப்பாய் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் கடமையாற்றும் விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கை பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles