அகில இலங்கை தமிழ்மொழி தின போட்டியில் மத்திய மாகாணம் 4 ஆவது இடத்தில்

அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் கிழக்கு மாகாணம் 22 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இப்போட்டியில், கிழக்கு மாகாணமானது 7 முதலிடங்களையும் 6 இரண்டாமிடங்களையும் 9 மூன்றாமிடங்களையும் பெற்று 22 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான இப்போட்டியில் முதலாம் நிலை மாகாணமாக கிழக்கு மாகாணம் தெரிவாகியுள்ளது.

இதேவேளை, இம்முறை வடக்கு மாகாணம் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. இம்மாகாணமானது 10 முதலாமிடங்களையும் 5 இரண்டாமிடங்களையும் 5 மூன்றாமிடங்களையும் பெற்று 20 புள்ளிகளை பெற்றுள்ளது.

13 புள்ளிகளுடன் மேல் மாகாணம் மூன்றாமிடத்தையும் 12 புள்ளிகளுடன் மத்திய மாகாணம் நான்காமிடத்தையும் 10 புள்ளிகளுடன் ஊவா மாகாணம் ஐந்தாமிடத்தையும் 5 புள்ளிகளுடன் சப்பிரகமுவ மாகாணம் ஆறாமிடத்தையும் மூன்று புள்ளிகளுடன் வடமேல் மாகாணம் ஏழாமிடத்தையும் இரண்டு புள்ளிகளுடன் தென் மாகாணம் எட்டாமிடத்தையும் பிடித்துள்ளது.

வட மத்திய மாகாணத்துக்கு எந்தவிதமான புள்ளிகளும் கிடைக்கவில்லை.

Related Articles

Latest Articles