போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை பாரதூரமான பிரச்சினையாகியுள்ளதாகவும், நாட்டில் நான்கரை இலட்சம் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர்,ஐஸ் ரக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருடகாலமாக வரையறுக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது போல், நாடளாவிய ரீதியில் செயலணிகளை உருவாக்கி இந்த பேராபத்திலிருந்து நாட்டை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










