2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்தை ஆரம்பித்து வைப்பதுடன், பாதீடு தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. 9.30 முதல் மாலை 5.30 மணிவரை இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும். இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெறும்.
இதன் பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டுமூலம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன் இது டிசம்பர் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன் மீதான விவாதம் முற்பகல் 9.30 மணி முதல் இரவு 7.00 மணிவரை நடைபெறும். இதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி இரவு 7 மணிக்கு நடைபெறும்.










