சவப்பெட்டியை ஏற்றிச்சென்ற சாரதி விபத்தில் பலி – நானுஓயாவில் நடந்தது என்ன?

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த டொமினிக் அனுஷன் (வயது 21) ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு சவப்பெட்டியை ஏற்றிச் சென்று ஒப்படைத்த பின்னர், சாரதி தனது வீட்டுக்கு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (16.11.2022) இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (17.11.2022) அதிகாலையிலேயே அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள் விபத்தை கண்டு நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த போது, சாரதி ஜீப்பிலேயே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பில் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles