ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது இதொகா – ஜீவன் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குடும்பம் ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது. இந்த இழப்பு காங்கிரஸிற்கு மட்டுமல்ல. மலையக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

1994ம் ஆண்டு காலப்பகுதியில் இருளில் இருந்த மலையகத்திற்கு தன்னுடைய அமைச்சின் ஊடாக மின்சாரத்தை பெற்று ஒளி தந்தவர் அமரர். முத்துசிவலிங்கம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவரென சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா போற்றப்பட்டதன் பின் தற்போது மூத்த தலைவர் என்ற வரிசையில் முத்து சிவலிங்கம் ஐயாவும் இணைவார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 83 வருட அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் பல தசாப்த காலமாக தொழிற்சங்கம் மற்றும் அரசியல் வழிகாட்டியாக இருந்து இந்த மாபெரும் அமைப்பின் தலைவராகவும், போசகராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், மலையக மக்களின் பிரதி அமைச்சராகவும், பதவி வகித்து எம்மை வழிநடத்திய இந்த மூத்த தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின் எனது தந்தை அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வழிகாட்டியாக இருந்த இவர். இவர்களின் மறைவுக்கு பின் என்னையும் வழிநடத்தினார் என்பதை மறந்துவிட முடியாது.

அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, இவரின் குடும்பத்தாருடன் துக்கத்தை பகிர்ந்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles