ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகள்!

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி, நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலய பாடசாலையான ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் 22 மாணவர்கள் எட்டு பாடங்களிலும் 16 பேர் ஏழு பாடங்களிலும் 18 பேர் ஆறு பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அனைத்துப் பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்ற மாணவர்களில் நான்கு பேர் ஆங்கில மொழி பிரிவை சேர்ந்தர்வகளாவர். மேலும் உயர்தரம் செய்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் 98 ஆகும். இம்முறை பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 192 ஆகும். இதில் ஆறு பாடங்களுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 191 ஆகும். கணிதம் மற்றும் தமிழ் மொழிகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 188 ஆகும்.

இதன் படி உயர்தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 188 ஆகும். அதே வேளை ஆங்கிலப்பிரிவில் தோற்றிய 39 மாணவர்களின் அனைத்து மாணவர்களும் உயர்தரம் செய்யக்கூடிய பெறுபேறுகளைப் பெற்று 100% சித்தியைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறந்த சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள் , பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் ஆர்.ஸ்ரீதர் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles