ஷிரந்தி ராஜபக்ச கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், கொழும்பு, கிருளப்பனை பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வங்கியொன்றிலிருந்து 100 இலட்சம் ரூபா பெற்று முறைகேடாக பயன்படுத்தியமை, ஊழல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles