கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இன்று காலை 4.45 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.










