OMP அலுவலகத்தின் செயற்பாடு துரிதமாக இடம்பெறுகிறது!

இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகளை வேகமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இறுதிப்படுத்தப்பட்ட ஆயிரத்து 653 ஆவணங்கள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், இழப்பீடு தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் ஆயிரத்து 753  குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 320 ஆவணங்களுக்கு (குடும்பங்களுக்கு) இழப்பீடு வழங்கப்படவுள்ளது.  அதேபோல 5 ஆயிரத்து 246 ஆவணங்கள் எஞ்சியுள்ளன.

இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 780 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக 9 மாகாணங்களிலும் செயலணி உருவாக்கப்படும். இதன் முதற்கட்டமாக வடக்கில் ஆளுநர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles