மஸ்கெலியா, சாமிமலை , கவரவிலை பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
செ.தி. பெருமாள்
