நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை தரவரிசையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.
சிறப்பான நோயாளர்கள் பாராமரிப்பு, நோயாளர்களுக்கு முறையான பரிசோதனைகள், சிறப்பான அம்புலன்ஸ் சேவை, தூய்மை பேணியமை, ஒற்றுமையுடனும் குழுவாகவும் செயற்பட்டமை போன்ற இன்னும் பல சிறப்பு அம்சங்களை பின்பற்றியமையால் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
அதற்கிணங்க கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இவ்வெற்றிக்கு காரணமான வைத்தியர்கள், தாதியர்கள் அதன் உத்தியோகத்தர்கள் சான்றிதழ்கள் வழங்கியும் விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் காயத்திரி ரவிவர்மா, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எம். நிமால் விஜேசூரிய, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நிஷங்க விஜேவர்தன, கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உதர ஜயசேகர, லிந்துலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரெய்ஷினி, கொட்டகலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுதர்சன், லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெயராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
