கினிகத்தேனையில் வேன் விபத்து – 13 பேர் காயம்!

கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் இன்று காலை வேன் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகாமையில் உள்ள பம்பஹேன பகுதியில் வைத்தே வேன் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வேனில் 15 பேர் பயணித்துள்ளனர் எனவும், இவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட சிகிச்சைகளின் பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் மரண வீடொன்றுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கம்பஹா பகுதியை நோக்கி மீண்டும் பயணிக்கையிலேயே காலை 8.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

க.கிசாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles