அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த ஆண்டில் இதுவரை 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதுவரையிலும் 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் 108,510 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 78,827 பேரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 74,713 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles