ஆர்ஜென்டினா அணியும் ஐக்கிய தேசியக்கட்சியும்!

(காலச்சக்கரம்)
1978 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினா அணி, முதன்முதலில் கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்தபோது, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியே நிலவியது.   தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில், இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சராக பதவி வகித்தார்.

1977 – 1978 காலப்பகுதி இலங்கை வரலாற்றில் முக்கிய காலப்பகுதியாகும்.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கம்,  திறந்த பொருளாதாரக் கொள்கை, தேர்தல் முறைமை மாற்றம் என முக்கிய சில விடயங்களை பட்டியலிடலாம்.

1986 ஆம் ஆண்டில் ஜேர்மனியை வீழ்த்தி ஆர்ஜென்டினா அணி, 2 ஆவது தடவை உலகக்கிண்ணம் வெல்லும்போதும், இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியே நீடித்தது.  ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக செயற்பட்டார்.

1986  ஆம் ஆண்டிற்கு பிறகு, உலகக்கிண்ண தொடரில் ஆர்ஜென்டினா அணி, 2014 ஆம் ஆண்டுவரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை. மூன்றாம் இடத்துக்குகூட முன்னேறவில்லை.

2014 இல் பிரேசிலில் நடைபெற்ற உலக்கிண்ண போட்டியில் இறுதிபோட்டிக்கு தெரிவாகி இருந்தாலும், ஜேர்மனியிடம் வீழ்ந்தது. எனினும், 86 இற்கு பிறகு ஆர்ஜென்டினா அணிக்கு அது பாரிய எழுச்சியாக கருதப்பட்டது.

1994 தேர்தலின் பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு 2014 இல் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் எழுச்சி பயணமாக அமைந்தது. மஹிந்த அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஐ.தே.கவின் எழுச்சி பயணம் ஆரம்பமானது. 2015 இல் ஆட்சியையும் கைப்பற்றியது.

2022 இல் ஆர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்குள் தெரிவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார்.

ஆர்ஜென்டினா உலகக்கிண்ணம் வெல்லும் காலப்பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரம் இப்படி வீழ்ச்சியை சந்தித்திருக்கவில்லை. இன்று வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. ஆர்ஜென்டினா அணியினர் மெஸியை முழுமையாக நம்புவதுபோல,  மொட்டு கட்சியினர் ரணிலை நம்பியுள்ளனர். (தமது இருப்புக்கு அல்லது அடுத்த தேர்தலுக்கு முன்னேறுவதற்கு) அதேபோல கட்சியின் எழுச்சிக்கு ரணிலையே ஐதேகவும் நம்பியுள்ளது.

பிரான்ஸ் அணி 1998 இல் உலகக்கிண்ணம் வெல்லும்போது இலங்கையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியே பதவியில் இருந்தார். (சந்திரிக்கா). 2018 இல் உலகக்கிண்ணம் வெல்லும்போதும் சுதந்திரக்கட்சி தலைவரே ஜனாதிபதியாக செயற்பட்டார் (மைத்திரி).

பிரான்ஸ், ஆர்ஜென்டினா அணிகள் இரு தடவைகள் உலக்கிண்ணம் வென்றிருந்தாலும், உலக்கிண்ண தொடரில் இறுதி போட்டியில் இம்முறையே முதன்முறையாக மோதுகின்றன.  இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் கிண்ணம் வெல்லும் அணிக்கு வாழ்த்துகள்.

ஆர்.சனத்
#unp #FIFAWorldCup2022

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles