சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கம்பஹாவில் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள கேரேஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வெலிவேரிய ஹெனகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத இந்த அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அசெம்பிள் செய்து விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Related Articles

Latest Articles