” நான் மாகாணசபை அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில், யாரும் மாகாணசபையில் செய்துகாட்ட முடியாத பல விடயங்களை செய்துக்காட்டியுள்ளேன் அதைவிடவும் பாராளுமன்றம் ஊடாக பலமடங்கு வேலைகளை செய்ய முடியும் என நம்புகின்றேன்.” – என்று இ.தொகாவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
” மாகாண சபையில் பதவியில் இருந்தபோது என்னிடம் அமைச்சு காணப்பட்டது.அதனூடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட்டன. ஆசிரிய நியமனங்கள், அரசாங்க உத்தியோக நியமனங்கள் உட்பட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனவே, நான் பாராளுமன்றம் சென்றால், பல மடங்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருக்கும்.” – எனவும் அவர் கூறினார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்










