கெலண்டர், டயரிகளை பெறுவதிலும் திண்டாட்டம்

இலங்கையில் நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை  அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளது என இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது இம்முறையே இவ்வாறு குறைவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடதாசிகளின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்,” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles