‘இரத்தினபுரியில் இந்து மதத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பேன்’

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுகொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்துள்ளார்.

இரத்தினபுரி சிவகாளியம்மன் திருகோவிலில் இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இரத்தினபுரி சிவகாளியம்மன் திருகோவிலின் பிரதம குருக்களும், இந்து சமய விவகாரம் தொடர்பான மாவட்ட செயலாளருமான சிவஸ்ரீ சிவயோகன் சர்மாவினால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்து சமய விவகாரம் தொடர்பான மாவட்ட செயலாளருமான சிவஸ்ரீ சிவயோகன் சர்மா, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமாருக்கு தெளிவூட்டியிருந்தார்.

விடயங்களை ஆராய்ந்த எஸ்.ஆனந்தகுமார், இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மத வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும் தான் இனிவரும் காலங்களில் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து விவகாரங்களில் பாரிய பிரச்சினைகள் நிலவி வருகின்றதாகவும், அதனை நிவர்த்தி செய்த எந்தவொரு தமிழ் தலைமைகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் இந்து மதத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பை இன்று முதல் தனது கைகளில் எடுத்துகொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்துள்ளார்.

Related Articles

Latest Articles