இம்மாத இறுதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே, இன்னும் இரு நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

Related Articles

Latest Articles