சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இலங்கை வருகிறது!

சீனாவின் சர்வதேசத்துறை துணை அமைச்சர் சென் சோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு, 2023 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இது 2023இல் சீனக் கட்சியின் முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் மற்றும் சீனா தேசியக்காங்கிரஸின் 20ஆவது மாநாட்டுக்கு பின்னரான முதல் பயணம் என்று தூதரக தரப்புக்கள் தெரிவித்தன.

தூதுக்குழுவினர் இலங்கையின் அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்திருந்தார்.

இதன்போது இந்தியா, இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மறுசீரமைப்பு தொடர்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சீனக்குழுவினர் தாம் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் பேச்சு நடத்துவார்களா?என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles