முட்டை இறக்குமதி தொடர்பான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள்!

முட்டை இறக்குமதி தொடர்பான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள் வெளிப்படுத்தப்படும் என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறியப்படுத்தியுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த திணைக்களத்தின் விசேட நிபுணர்க்குழுவினால் கலந்துரையாடல் நடத்தப்பட்டு குறித்த வழிகாட்டுதல் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்றைய தினம் அனுமதி கிடைக்குமாயின் 3 அல்லது 4 நாட்களுக்குள் முட்டையை இறக்குமதி செய்ய முடியும் எனவும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி விலயசுந்தர தெரிவித்துள்ளார்.

முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக முட்டையை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கேள்விமனு கோரப்பட்டது.

விண்ணப்பங்களை முன்வைத்த 22 பேரில் 2 பேருக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இந்தியாவில் கோழி காய்ச்சல் பரவுவதால் முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் மாறுபட்ட விலைகளில் முட்டை விற்பனை செய்யப்படுதவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles